காரை வழிமறித்து தகராறு செய்த வாலிபர் கைது

பாபநாசம் அருகே காரை வழிமறித்து தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2017-01-15 21:25 GMT
பாபநாசம்,

தகராறு

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே வீரமங்கலம் கிராமம் ஒருகால்பாடகம் கிராமத்தை சேர்ந்தவர் ராமு (வயது 28). இவர் தனது காரில் குடும்பத்துடன் தென்கரை ஆலத்தூர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அதே ஊரை சேர்ந்த அருண்குமார்(22), மணிகண்டன், தென்கரை ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த சிவசக்தி, யுவராஜ் ஆகிய 4 பேரும் ராமு ஓட்டி வந்த காரை வழிமறித்து தகராறு செய்து அவரை தகாத வார்த்தைகளால் திட்டினர்.

வாலிபர் கைது

இதுகுறித்து ராமு கொடுத்த புகாரின்பேரில் பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வனஜா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மணிகண்டன், சிவசக்தி, யுவராஜ் ஆகிய 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்