விஜய் மக்கள் இயக்க தலைவர் கொலையா? 3 பேரிடம் போலீசார் விசாரணை
பாலாற்றில் இறந்து கிடந்தவர் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் என்பது தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் 3 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம்,
விஜய் மக்கள் இயக்க தலைவர்
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் மூழ்கி கடந்த 12-ந் தேதி ஆண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவர் யார் என்று விசாரணை நடத்தி வந்தார்.
விசாரணையில் அவர் காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரி விஸ்வநாதபுரம் 3-வது தெருவை சேர்ந்த இமயம் ரவி (வயது 48) என்பதும் ஓவியரான அவர் காஞ்சீபுரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவராக பதவி வகித்து வந்தவர் என்பதும் தெரியவந்தது.
அஞ்சலி
போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் கூடுவாஞ்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இமயம் ரவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலை 6 மணி அளவில் நடிகர் விஜய் கூடுவாஞ்சேரியில் உள்ள மறைந்த இமயம் ரவியின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
இமயம் ரவி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.