தளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
தளி அருகே உள்ள செல்லப்பம்பாளையத்தில் குடிநீர் கேட்டு அரசு பஸ்களை சிறைபிடித்து பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்
தளி,
சாலை மறியல்
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த தளி அருகே உள்ள செல்லப்பம்பாளையம் கிராமத்திற்கு திருமூர்த்தி அணையிலிருந்து கணக்கம்பாளையம் மற்றும் பூலாங்கிணறு ஆகிய குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செல்லப்பம்பாளையத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்த குடிநீர், கடந்த சில நாட்களாக சரியாக வரவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து குடிநீர் பெற்றுத்தரக்கோரி ஊராட்சி செயலாளர் ராஜேந்திரனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ராஜேந்திரன் அதற்குண்டான எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியம் செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று ஊராட்சி செயலாளர் ராஜேந்திரனை மாற்றக்கோரியும், தங்கள் பகுதிக்கு குடிநீர் கேட்டும் அந்த வழியாக வந்த 3 அரசு பஸ்களை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்பட்டது.
இது குறித்த தகவல் அறிந்ததும் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
கலைந்து சென்றனர்
வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு ஆகியோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பொதுமக்களிடம் பேசிய அதிகாரிகள், செல்லப்பம்பாளையம் கிராமத்திற்கு சீரான இடைவெளியில் குடிநீர் வழங்குவதாகவும், ஊராட்சி செயலாளர் ராஜேந்திரனை மாற்றுவதற்கு உண்டான நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதி அளித்தனர்.
இதையடுத்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட அரசு பஸ்களும் விடுவிக்கப்பட்டன.