வேலூர் ரங்காபுரத்தில் தடையை மீறி எருது விடும் விழா
வேலூர் ரங்காபுரத்தில் தடையை மீறி எருது விடும் விழா நடந்தது.
வேலூர்,
ஜல்லிக்கட்டு
பொங்கல் பண்டிகையின்போது தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா, மஞ்சு விரட்டு போன்றவை நடத்தப்படுவது பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் வழக்கம் ஆகும். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழா நடத்தப்படுவது வழக்கம்.
இந்த விளையாட்டின்போது காளைகள் வதைக்கப்படுவதாகவும், துன்புறுத்தப்படுவதாகவும் கூறி பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கின்பேரில் ஜல்லிக்கட்டு, எருதுவிடும் விழா போன்ற விளையாட்டுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்துள்ளது.
இந்த நிலையில் தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தமிழர்களிடையே ஒருமித்த குரல் எழும்பியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
வேலூரிலும் கடந்த 13-ந் தேதி ஏராளமான இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எருது விடும் விழா
இந்த நிலையில் நேற்று வேலூர் ரங்காபுரத்தில் தடையை மீறி எருதுவிடும் விழா நடந்தது. இதற்காக ரங்காபுரம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டன. அந்த காளைகளின் கொம்பில் வண்ண கயிறுகள் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்த எருதுவிடும் விழாவை பார்ப்பதற்காக வேலூர், சத்துவாச்சாரி உள்பட சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இந்த விழாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு மகிழ்ந்தனர்.
இந்த காளைகளுக்கு இருபுறமும் கயிறுகள் கட்டப்பட்டு விழா நடந்த தெருவில் விடப்பட்டது. அவை துள்ளிக்குதித்தபடி ஓடிவந்தன. அதனை வீரர்கள் மடக்குவதற்காக கயிற்றை பிடித்தனர். ஆனால் பல காளைகள் வீரர்களின் பிடியில் சிக்காமல் வேகமாக ஓடியது. இதனால் வீரர்களில் சிலர் கீழே விழுந்தனர்.
இந்த எருது விடும் விழாவால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீஸ் குவிப்பு
இதேபோல் வேலூர் பாகாயம் அருகே உள்ள மேட்டு இடையம்பட்டி, மூஞ்சூர்பட்டு, ஊசூர் உள்ளிட்ட பகுதிகளில் தடையை மிறி எருதுவிடும் விழா நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனையடுத்து வேலூர் தாலுகா போலீசார் மற்றும் பாகாயம் போலீசார் அந்த பகுதிகளில் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடையை மீறி மாடு விடும் விழா நடத்தக் கூடாது என பொதுமக்களை போலீசார் எச்சரித்தனர். மேலும் விழா நடத்தாமல் இருக்க போலீசார் தொடர்ந்து அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.