பேரையூர் அருகே இடப்பிரச்சினை காரணமாக இருதரப்பினர் மோதல்
பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் இந்திராகாலனி.
பேரையூர்,
பேரையூர் அருகே உள்ளது சந்தையூர் இந்திராகாலனி. இந்தப்பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் அருகருகே வசித்து வருகின்றனர். அவர்களுக்குள் இடப்பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்து வருகிறது. இதுசம்பந்தமான வழக்கு பேரையூர் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் நேற்று இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஜெயராம், கருப்பசாமி, காளிராஜ், உள்ளிட்ட 14 பேர் ஒரு தரப்பினராகவும், குருசாமி, முனிச்செல்வி, சங்கர், உள்ளிட்ட 12 பேர் ஒரு தரப்பினராகவும் மோதிக்கொண்டனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய பேரையூர் போலீசார் இருதரப்பையும் சேர்ந்த 26 பேர் மீது வழக்குபதிவுசெய்தனர். பின்னர் சங்கர், கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.