லண்டன் நகரில் உள்ள கோவிலுக்கு ஐம்பொன்னால் ஆன முருகன் சிலை

இங்கிலாந்தின் தலைநகரன லண்டனில் ஹைகேட் ஹில் முருகன் கோவில் உள்ளது.

Update: 2017-01-15 19:30 GMT

பழனி,

இங்கிலாந்தின் தலைநகரன லண்டனில் ஹைகேட் ஹில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கடந்த 1979–ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. பின்னர் 1986–ல் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த கோவிலில் காலை 8 மணி, பகல் 11.30 மணி, மாலை 5 மணி, இரவு 8மணி ஆகிய நேரங்களில் பூஜைகள் நடைபெறுகிறது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் அங்குள்ள இந்துக்கள் வழிபட்டு வருகிறாரகள். இதையொட்டி கோவிலில் வைப்பதற்காக ஐந்து தலை நாகத்துடன் கூடிய தண்டாயுதபாணி சுவாமி சிலையினை கேரளா மாநிலத்தை சேர்ந்த ரகீத் குமார் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த முருகன் சிலை லண்டனுக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்த நிலையில் கோவில் குருகள் நாக சுப்பிரமணிசாமி தலைமையில் நேற்று முன்தினம் முருகன் சிலை பழனிக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் பழனி முருகன் மலைக்கோவிலை கிரிவலம் வந்த பின்னர் முருகன் சிலை லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. கிரிவலத்தின் போது ஏராளமான பக்தர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

மேலும் செய்திகள்