காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலில் உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி வழிபாடு
மாட்டுப்பொங்கலையொட்டி காளியாபுரம் மாட்டேகவுண்டன் கோவிலில் விவசாயிகள், பக்தர்கள் உருவார பொம்மைகளை காணிக்கை;
ஆனைமலை,
மாட்டேகவுண்டன் கோவில்
ஆனைமலையை அடுத்த காளியாபுரத்தில் மாட்டேகவுண்டன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாட்டுப்பொங்கல் அன்று சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இதே போல் நேற்று மாட்டுப்பொங்கலையொட்டி மாட்டேகவுண்டன் கோவிலில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் மாட்டேகவுண்டன் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள், விவசாயிகள் தங்களது ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு நோய் தாக்காமல் இருக்கவும், கால்நடைகளால் செல்வம் பெருகவும் சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்கள். தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
உருவார பொம்மைகள்
இதன் பின்னர் பக்தர்கள், விவசாயிகள் பலர் ஆடு, கோழி, மாடு போன்ற உருவார பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி வழிபாடு நடத்தினார்கள். தொடர்ந்து கோவிலில் இருந்து தீர்த்தம் எடுத்துக் கொண்டு தங்களது வீடுகளுக்கு சென்றனர். தீர்த்தத்தை வீடுகளிலும், ஆடு, மாடுகளை அடைத்து வைக்கப் படும் பட்டிகளிலும் தெளித்தனர். மேலும் நேற்று மாட்டுப்பொங்கலையொட்டி மாடுகளுக்கு அலங் காரம் செய்து, பூஜைகள் செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கால்நடைகளின் காவல் தெய்வமாக மாட்டேகவுண்டன் சாமி உள்ளார். கால் நடைகள் நோய் நொடி இல்லாமல் இருக்கவும், வருமானம் பெருகவும் மாட்டேகவுண்டன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கடந்த ஆண்டின் வேண்டுதல்கள் நிறைவேறியதால், காணிக்கையாக உருவார பொம்மைகளை செலுத்தி உள்ளோம். இந்த ஆண்டும் வேண்டுதல்கள் வைத்துள்ளோம். மேலும் இந்த கோவிலில் வழங்கப்படும் தீர்த்தத்தை கால்நடைகள் வளர்க்கப்படும் பட்டிகளில் தெளித்துள்ளோம். இதன் மூலம் அவைகளை நோய் தாக்காது என்பது ஐதீகம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.