தலைவாசல் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்;

ஆத்தூர் பாரதியார் நகரில் வசித்து வருபவர் சேவியர் (வயது 38), தனியார் பஸ் டிரைவர்.

Update: 2017-01-15 22:00 GMT

தலைவாசல்,

ஆத்தூர் பாரதியார் நகரில் வசித்து வருபவர் சேவியர் (வயது 38), தனியார் பஸ் டிரைவர். இவருடைய மனைவி மார்ட்டினா (30). இவர்களுக்கு தன்ஷிகா (4) என்ற மகளும், டாப்சி என்ற 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று காலை 11 மணியளவில் ஆத்தூரில் இருந்து கோவிந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு, மோட்டார் சைக்கிளில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றார். தேவியாக்குறிச்சி தனியார் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிள் சென்ற போது, கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பின்னால் குழந்தையுடன் அமர்ந்திருந்த மார்ட்டினா, சம்பவ இடத்திலேயே கணவர் கண் எதிரே துடிதுடித்து இறந்தார். அதே நேரத்தில் சேவியர், அவருடைய மகள்கள் தன்ஷிகா, டாப்சி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் 3 பேரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தலைவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான சென்னை மாதவரத்தை சேர்ந்த ஜசக்கை(35) கைது செய்தார்.

மேலும் செய்திகள்