தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. கொடியேற்று விழா

தர்மபுரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2017-01-15 23:00 GMT

தர்மபுரி,

கொடியேற்று விழா

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை தர்மபுரி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பல்வேறு இடங்களில் கட்சியின் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

தர்மபுரி நகராட்சி அன்னசாகரத்தில் தி.மு.க. சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி கட்சியின் கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நகர செயலாளர் தங்கராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் சிட்டி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன் வரவேற்று பேசினார். விழாவையொட்டி பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் பரிசு வழங்கினர். இதில் கட்சி நிர்வாகிகள் சாய்சன், அழகுவேல், தேவராஜ், காசிநாதன், முருகன், நாராயணன், சங்கர், மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆட்டுக்காரன்பட்டி

தர்மபுரி ஒன்றிய தி.மு.க. சார்பில் பழைய தர்மபுரியில் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய செயலாளர் சேட்டு தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஊராட்சி தலைவர் சிவலிங்கம், கூட்டுறவு சங்க துணைத்தலைவர் லட்சுமணன், கட்சி நிர்வாகி பரங்குசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கினார்.

இதே போன்று ஆட்டுக்காரன்பட்டி, ஏ.கொல்லஅள்ளி கிராமங்களிலும் தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் தடங்கம் சுப்ரமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்து பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாது, சங்க நிர்வாகிகள் அண்ணாதுரை, ராஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்