திருப்புல்லாணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்

திருப்புல்லாணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்

Update: 2017-01-15 22:45 GMT

கீழக்கரை,

திருப்புல்லாணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் வாலிபர் ஒருவர் இறந்து போனார்.

நேருக்கு நேர் மோதல்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மங்களேஸ்வரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகன் பாலமுருகன் (வயது 32). இவர் தனது நண்பரான ஏர்வாடி முத்துராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த முத்துமுனியன் மகன் நம்புகுமார்(24) என்பவருடன் கும்பரத்தில் உள்ள தங்கை வீட்டிற்கு பொங்கல் பண்டிகைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

ரெகுநாதபுரம் சக்திபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன், இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

வாலிபர் சாவு

இதில் படுகாயமடைந்த பாலமுருகன், நம்புகுமார் ஆகியோர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலமுருகன் பரிதாபமாக இறந்து போனார். நம்புகுமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த திருப்புல்லாணி சங்கந்தியான்வலசையை சேர்ந்த ராமமூர்த்தி மகன் ரூமேஸ்(21) என்பவருக்கும் விபத்தில் காயம் ஏற்பட்டது. ராமநாதபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து திருப்புல்லாணி போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

மேலும் செய்திகள்