திருவண்ணாமலை அருகே விவசாயி வீட்டின் ஜன்னலை உடைத்து நகை, பணம் திருட்டு
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் அருகே உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பன்
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த நல்லவன்பாளையம் அருகே உள்ள சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கருப்பன் (வயது 55), விவசாயி. பொங்கல் பண்டியையையொட்டி சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சொந்த ஊரான செங்கம் அருகே உள்ள கொட்டையூர் கிராமத்திற்கு சென்றார்.
பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜன்னலை உடைத்துக் கொண்டு மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு, மர்மநபர்களை தேடி வருகின்றனர்.