புற்றுச் செல்களை அழிக்கும் நானோ தட்டுகள்

புற்றுச் செல்களை அழிக்கும் நானோ தட்டுகள்

Update: 2017-01-14 03:28 GMT
னிதகுலத்தைப் பயமுறுத்தும் புற்றுநோய் தொடர்பான ஆய்வுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அமெரிக்காவில் மட்டும் 1.40 கோடிப் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வோர் ஆண்டும் 1.30 கோடிப் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

எனவே, புற்றுநோய்க்கு எதிரான போரில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில், மிக்சிகன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் புற்றுநோய் குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் விளைவாக, நவீன தொழில்நுட்பத்தைக் கொண்ட நானோ தட்டுக்களை உருவாக்கியுள்ளனர்.

10 நானோ மீட்டர் அளவுடைய இந்தத் தட்டுகள் புற்றுநோய்ச் செல்களைத் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டவை என்று கூறப்படுகிறது.

இத்தட்டுக்கள், மனித உடலின் நோய் எதிர்ப்பு அமைப்புச் செல்களுடன் இணைந்து புற்றுநோய்ச் செல்களை சென்றடைகின்றன.

குறிப்பிட்ட நானோ தட்டுகள், உடலுக்குள் செலுத்தப்பட்டு 10 நாட்களில் புற்றுநோய்ச் செல்களுக்கு பெருத்த சேதத்தை ஏற் படுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நானோ தட்டுகள் நடைமுறை மருத்துவப் பயன்பாட்டுக்கு வரும்போது, புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு பெரும் முன்னேற்றமாக அமையும் என நம்பலாம்.

மேலும் செய்திகள்