உறவுகளை மதிப்போம் சுவாமி ஓங்காரனந்தா

உறவுகளை மதிப்போம் சுவாமி ஓங்காரனந்தா

Update: 2017-01-14 02:39 GMT
ழைப்பின் சிறப்பையும், அதன் பெருமையையும் எடுத்துக்காட்டும் பொங்கல் திருநாள் ஒவ்வொரு ஆண்டும் வந்து நம்மை மகிழ்விக்கிறது. பொங்கல் பானையில் பால் பொங்கி வழியும் போது அனைவரும் மகிழ்ச்சியுடன் “பொங்கலோ பொங்கல்” என்று குரல் எழுப்புவர். இதன் அர்த்தம் என்னவென்றால் இறைவா எங்களை வாழ்விக்க வாருங்கள். வாழ்த்த வாருங்கள் என்பதேயாகும்.

பெற்றோர்கள் குழந்தைகளை ஒழுக்கத்தோடும், பண்பாட்டோடும் வளர்க்க வேண்டும். நல்ல குணங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் கல்வியை பொறுப்போடும், கருத்தோடும் காலத்தை வீணாக்காமல் கற்று, தனது குடும்பத்தையும், நாட்டையும் உலகையும் வாழ்விக்க தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். கல்வியின் பயனை முழுமையாக பெற்று தன் குடும்பத்தையும் நாட்டையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.

அன்றைய காலங்களில் மனிதன் 21 வகையான உறவுகளில் கூடி வாழ்ந்தான். அவன் வாழ்வு பூரணமாக இருந்தது. இன்றைய காலத்தில் ஒரு உறவு கூட இல்லாமல் வாழ்ந்து வருகிறான். உறவுகளை மதித்தால் உயர்ந்து வாழலாம்.

சத்தியம், தர்மம், நியாயம், அன்பு, அருள் ஆகியவைகளை கடைப்பிடித்தால் நாமும் உயர்வோம். நாடும் உயரும். ஞான வைராக்கியத்தோடு, ஈஸ்வர சிந்தனையோடு, இயற்கையோடு பூரண சரணாகதி அடைந்தால் எல்லாம் உங்களுக்கு சொந்தமாகும். நீங்களும் பிறருக்கு கொடுக்கின்ற ஆற்றலை பெறுவீர்கள்.

எதற்கும் கவலைப்பட்டு கொண்டு இருக்காதீர்கள். அப்படியிருந்தால் ஆறாவது அறிவு இல்லையென்று பொருள். கவலையை விட்டு விடுங்கள். இறைவனிடம் பற்று வையுங்கள்.

கோபுர தரிசனத்தை பாருங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுர தரிசனம் பார்க்க, பார்க்க உங்கள் சிந்தனை உயரும்.

எந்த காரணத்தை கொண்டும் மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும் தீங்கு செய்யாதீர்கள். தீய சிந்தனைகளை தூக்கி எறிந்து விட்டு காதலாகி, கசிந்து, உள்ளுருகி இறைவனிடம் வேண்டுங்கள்.

மேலும் செய்திகள்