சகன் புஜ்பாலுக்கு வி.ஐ.பி. சிகிச்சை ஜே.ஜே. ஆஸ்பத்திரி டீன் குற்றவாளி கோர்ட்டில் தீர்ப்பு

சகன் புஜ்பாலுக்கு வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் ஜே.ஜே. ஆஸ்பத்திரி டீன் குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு.

Update: 2017-01-13 23:04 GMT

மும்பை,

உழல் வழக்குகள்

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி சகன் புஜ்பால். இவருக்கு மகராஸ்டிரா சதன் ஊழல் உள்பட பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பதாக கூறி போலீசாரால் கைது செய்யப்பட்டு மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைவாசம் அனுபவித்து வந்த அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து இவர் கடந்த டிசம்பர் மாதம் சிகிச்சைக்காக ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் கோர்ட்டு ஒப்புதலுடன் பாம்பே தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார்.

நடவடிக்கை

இந்தநிலையில் சமூகஆர்வலர் அஞ்சலி தமானியா மும்பை அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இதில் சகன் புஜ்பாலுக்கு ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் விதிமுறைகளை மீறி வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதற்கு ஆஸ்பத்திரி டீன் லகானே உதவியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் விதிமுறைகளை மீறி சகன் புஜ்பாலுக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரி டீன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சகன் புஜ்பாலுக்கு வி.ஐ.பி. சிகிச்சை அளிக்கப்பட்ட விவகாரத்தில் ஜே.ஜே. ஆஸ்பத்திரி டீன் லகானே குற்றவாளி என தீர்ப்பு கூறியுள்ளது. தற்போது அமலாக்க நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மும்பை ஐகோர்டிற்கு அனுப்பி வைக்கப்படும். ஐகோர்ட்டு அளிக்கும் ஆலோசனையின்படி இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்