காஞ்சீபுரத்தில் ஜப்பான், தாய்லாந்து நாட்டினர் பங்கேற்ற யோகா நிகழ்ச்சி
தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகளை அறிந்து கொள்ளும் விதமாக ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் 10 நாட்கள் சுற்றுலா பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தனர்.
காஞ்சீபுரம்,
தமிழகத்தின் பாரம்பரிய பெருமைகளை அறிந்து கொள்ளும் விதமாக ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து நாடுகளை சேர்ந்தவர்கள் 10 நாட்கள் சுற்றுலா பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தனர். அவர்கள் திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு கோவில்களை பார்வையிட்டனர். பின்னர் காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு வந்த அவர்கள் அங்குள்ள சிற்ப கலையை பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கோவில் வளாகத்தில் பாரம்பரிய கலைகளில் ஒன்றான யோகாசனங்களை செய்து காட்டினர்.
இது பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது.