திருவள்ளுவர் தினம்: மதுக்கடைகளை நாளை மூட உத்தரவு

புதுவை கலால்துறை துணை ஆணையர் ஆபேல் ரொசாரியோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

Update: 2017-01-13 21:30 GMT

புதுச்சேரி

புதுவை கலால்துறை துணை ஆணையர் ஆபேல் ரொசாரியோ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

கலால் சட்டம் மற்றும் விதிகளின்படியும், புதுவை அரசிதழில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளின்படியும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி பகுதியில் உள்ள அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உள்பட அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட வேண்டும். மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களும் இதில் அடங்கும்.

எனவே அனைத்து இடங்களிலும் நாளை மது விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது கலால் சட்டவிதிகளின்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்