ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி கரூரில் தி.மு.க.வினர் காளை மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று காலை கரூர் ஜவகர் பஜாரில் உள்ள தலைமை தபால் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாய அணி செயலாளர் ம.சின்னசாமி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வர வேண்டும்.
காளை மாடுகள்ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் காளை மாடுகளுடன் தி.மு.க.வினர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.