பெரம்பலூர்– அரியலூர் மாவட்டங்களில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும்

Update: 2017-01-13 21:30 GMT

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகளின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் ஓட்டல் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். நாளை மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் சட்ட விதிகளின்படி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று கூறியுள்ளார்.

இதேபோல் அரியலூர் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் (டாஸ்மாக்) அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் அனைத்தும் திருவள்ளுவர் தினமான நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் குடியரசு தினமான வருகிற 26–ந் தேதி (வியாழக்கிழமை) மூடப்பட்டிருக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்