வேலூர் அருகே வாலிபரை தாக்கி பணம், செல்போன்கள் பறிப்பு 5 பேருக்கு வலைவீச்சு

வேலூர் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தாக்கி பணம் மற்றும் செல்போன்களை பறித்து சென்ற 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2017-01-13 22:45 GMT

வேலூர்,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–

செல்போன்கள், பணம் பறிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிக்காரை பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவருடைய மகன் கவுதம் (வயது 21). இவர் தனது நண்பர்கள் சரவணவேல், வசந்தன் ஆகியோருடன் நேற்று முன்தினம் மாலை வேலூருக்கு தனித்தனி மோட்டார் சைக்கிளில் வந்தனர். வேலூரை அடுத்த அப்துல்லாபுரத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ. அருகே உள்ள டீக்கடையில் டீ குடுப்பதற்காக அவர்கள் சென்றனர்.

அப்போது அங்கு 5 பேர் கும்பல் வந்தது. அந்த கும்பலை சேர்ந்தவர்கள், கவுதம் மற்றும் அவருடைய நண்பர்களை கத்தியை காட்டி மிரட்டி 2 செல்போன்கள், 1000 ரூபாய் ஆகியவற்றை பறித்துக் கொண்டு சென்று விட்டனர்.

5 பேருக்கு வலைவீச்சு

இதுகுறித்து கவுதம் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கவுதம் மற்றும் அவருடைய நண்பர்களை தாக்கி செல்போன்கள், பணத்தை பறித்தது அதே பகுதியை சேர்ந்த இம்ரான், சேட்டு மற்றும் 3 பேர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தலைமறைவான அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்