பொங்கல் போனஸ் வழங்கக்கோரி போக்குவரத்துக்கழக ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கக்கோரி நேற்று அரசு போக்குவரத்துக்கழகத்தின் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-13 22:15 GMT
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கக்கோரி நேற்று அரசு போக்குவரத்துக்கழகத்தின் தொ.மு.க. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் நீலகிரி கோட்ட பொதுமேலாளர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஏ.ஐ.டி.யு.சி. அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் தலைமை தாங்கினார். தொ.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த ஜெயராமன் முன்னிலை வகித்தார். போராட்டத்தின் போது ஓய்வூதிய தொகையை உடனே வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்களை எழுப்பினர். இதில் போக்குவரத்துக்கழக ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்