கொடைரோடு அருகே குடியிருப்புக்குள் புகுந்த மலைப்பாம்பு
சிறுமலை அடிவாரத்தில் சடையாண்டிபுரம் கிராமம் உள்ளது. நேற்று இரவு இப்பகுதியில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை அங்கு வசிக்கும் மக்கள் பார்த்தனர். உடனே நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.
கொடைரோடு,
கொடைரோடு அருகே சிறுமலை அடிவாரத்தில் சடையாண்டிபுரம் கிராமம் உள்ளது. நேற்று இரவு இப்பகுதியில் ஒரு மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதை அங்கு வசிக்கும் மக்கள் பார்த்தனர். உடனே நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அதிகாரி ஜோசப் தலைமையிலான வீரர்கள் அந்த மலைப்பாம்பை பிடித்தனர். இதற்கிடையே மலைப்பாம்பை பார்ப்பதற்காக அப்பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பிடிபட்ட மலைப்பாம்பை வனத்துறையினரிடம், தீயணைப்பு துறையினர் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பாம்பு சிறுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், பிடிபட்ட மலைப்பாம்பு சுமார் 7 அடி நீளம் இருக்கும். மலைச்சாலையில் வந்த வாகனங்கள் மூலம் இந்த பாம்பு குடியிருப்பு பகுதிக்கு வந்திருக்கலாம் என்றனர்.