குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்குவாடன்பட்டியில் இந்திரா காலனி உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று குடிநீர் கேட்டு ஊஞ்சாம

Update: 2017-01-13 22:30 GMT

அல்லிநகரம்,

தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சுக்குவாடன்பட்டியில் இந்திரா காலனி உள்ளது. இங்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் நேற்று குடிநீர் கேட்டு ஊஞ்சாம்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்த தேனி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (இன்று) குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்