தஞ்சையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா 17–ந்தேதி நடக்கிறது
தஞ்சையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா வருகிற 17–ந்தேதி நடக்கிறது.
தஞ்சாவூர்,
நூற்றாண்டு விழாமறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் நூற்றாண்டு விழா தஞ்சை தமிழரசி திருமணமண்டபத்தில் வருகிற 17–ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி காலை 9 மணிக்கு செட்டிகுளம் சாரதாம்பாள் பி.என்.காயத்திரி குழுவினரின் மங்கள இசை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் இவர்தான் எம்.ஜி.ஆர். என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெறுகிறது.
காலை 11.30 மணிக்கு கவிஞர் புலமைப்பித்தன் தலைமையில் என்பார்வையில் புரட்சித்தலைவர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. மதியம் 3 மணிக்கு புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வாழ்த்தரங்கம்மாலை 6 மணிக்கு எல்லோரும் கொண்டாடுவோம் என்ற தலைப்பில் வாழ்த்தரங்கம் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்குகிறார். இதில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தேசிய லீக் பொதுச்செயலாளர் நிஜாமுதீன், கனடாநாட்டை சேர்ந்த தேவா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.
விழாவில் மேரிலாண்ட் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் ராஜன்நடராஜன், மலேசியா நாட்டை சேர்ந்த கல்வி அமைச்சர் கமலநாதன், நைஜீரியா லகோஸ் மாநிலங்களவை சபாநாயகர் அஜேயிஒபாசா, அமெரிக்கா தமிழ் இளையோர் உலக கூட்டமைப்பு தலைவர் விஜய், பிரபாகரன், நைஜீரியா லாகோஸ் சர்வதேச தொடர்பு ஆலோசனைக்குழு காலின்ஸ்அவோசிகா ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இன்னிசை நிகழ்ச்சிஇரவு 8 மணிக்கு சங்கர்கணேஷ் வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. முடிவில் பி.ஆர்.ரவிச்சந்திரன் நன்றி கூறுகிறார்.