ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2017-01-13 23:15 GMT

தஞ்சாவூர்,

தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கல்யாணசுந்தரம், துரை.சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தி.மு.க. தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், தி.மு.க. வர்த்தக அணி தலைவர் உபயதுல்லா, எம்.எல்.ஏ.க்கள் ராமச்சந்திரன், கோவி.செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பீட்டா அமைப்புக்கு தடை

ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது. பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும். நாட்டு காளை மாடுகளை காப்பாற்ற வேண்டும். தமிழனின் கலாசாரத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் து.செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமலிங்கம், மகளிர் தொண்டரணி காரல்மார்க்ஸ், முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவன், தி.மு.க. விவசாய அணி துணைத்தலைவர் ஜித்து, நகர செயலாளர்கள் நீலமேகம், சுப.தமிழழகன், மருத்துவர் அணி அமைப்பாளர் அஞ்சுகம்பூபதி, செயற்குழு உறுப்பினர் காந்தி மற்றும் தி.மு.க. அனைத்து அணி நிர்வாகிகள், தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 3 காளை மாடுகளையும் அழைத்து வந்திருந்தனர்.

மேலும் செய்திகள்