வாணாபுரம் பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
குற்ற சம்பவங்களை தடுக்க வாணாபுரம் பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர்.
வாணாபுரம்,
கண்காணிப்பு பணி
தண்டராம்பட்டு தாலுகா வாணாபுரம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பல கேமராக்கள் பழுதடைந்தன.
இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாருக்கு கண்காணிப்பு கேமராக்களின் உதவி இல்லாமல் இருந்தது. இதையடுத்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவேண்டும். பழுதடைந்த கேமராக்கள் மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றது. பஸ் நிறுத்தங்கள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள், முக்கியசாலை உள்ளிட்ட பகுதியில் போலீசார் பழுதான கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும் பணிகளையும் கூடுதலாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை எளிதில்..
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது ‘நாளுக்கு நாள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் வாணாபுரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள முக்கியமான இடங்களில் தற்போது கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றது. இதனால் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை எளிதில் கண்டு பிடிக்க உதவியாக இருக்கும்’ என்றனர்.