தர்மபுரி மாவட்டத்தில் சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம்

Update: 2017-01-13 22:45 GMT

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணித்து தடுக்க மாவட்ட அளவில் சிறப்பு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு சென்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறார்கள். அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட சினிமா தியேட்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சினிமா தியேட்டர்களில் அரசு விதிமுறையை மீறி கூடுதல் கட்டணம் வசூலிப்பது தெரியவந்தால் பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் 1077, 18004251071, வாட்ஸ்அப் எண் 8903891077 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்