தலைமை ஆசிரியரை தாக்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்
நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள வடகரை பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகேசன் (வயது 52). அதே பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் முத்துகுமார். இவர்களுக்கு இடையே முன்விரோதம் காரணமாக தகராறு இருந்து வந்தது.
நெல்லை,

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கூட வளாகத்தில் நின்றிருந்த தலைமை ஆசிரியர் முருகேசனிடம், முத்துகுமார் தகராறு செய்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்குபதிவு செய்து முத்துகுமாரை கைது செய்து நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ஆசிரியர் முத்துகுமாரை நெல்லை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நிர்மலா ஜேசு பணியிடை நீக்கம் செய்து நேற்று உத்தரவிட்டுள்ளார்.