தூத்துக்குடி, கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தூத்துக்குடி, கோவில்பட்டியில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜல்லிக்கட்டு... தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், ஜல்

Update: 2017-01-13 21:00 GMT

தூத்துக்குடி,

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தூத்துக்குடி, கோவில்பட்டியில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஜல்லிக்கட்டு...

தமிழர்களின் பாரம்பரிய அடையாளமான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு அனுமதி வழங்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தியும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூர் ரோட்டில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் என்.பெரியசாமி தலைமை தாங்கினார். மாநில மகளிர் அணி துணை செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் ராஜ்மோகன்செல்வின், மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திருச்சிற்றம்பலம், ஜெயக்குமார் ரூபன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெகன், கோட்டுராஜா, கணேசன், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ் சாமுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவில்பட்டியில்...

வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலையில் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் செந்தூர்மணி, ஏஞ்சலா, பொருளாளர் மோகன், தலைமை செயற்குழு உறுப்பினர் மாறன், மாநில பொதுக்குழு உறுப்பனர்கள் பாண்டியன், அன்புராஜன், நகர செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன் (புதூர்), வேலாயுதபெருமாள், சின்ன மாரிமுத்து (விளாத்திகுளம்), முருகேசன், நவநீதகண்ணன் (கோவில்பட்டி), சின்னபாண்டியன் (கயத்தாறு), காசி விசுவநாதன் (ஓட்டப்பிடாரம்), மகராஜன் (கருங்குளம்), நகர செயலாளர்கள் தவசி (புதூர்), வேலுச்சாமி (விளாத்திகுளம்), சுடலைமணி (கயத்தாறு), பாரதி கணேசன் (எட்டயபுரம்), கிருஷ்ணகுமார் (கழுகுமலை),

மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் அய்யாத்துரை, சிவகுமார், இளையராஜா, இம்மானுவேல், டேவிட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்