ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி மத்திய–மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மத்திய–மாநில அரசுகளை கண்டித்து தி.மு.க. கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;

Update: 2017-01-13 22:30 GMT

ராமநாதபுரம்,

அறிவிப்பு

தமிழகத்தில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், தடையை நீக்க நடவடிக்கை எடுக்காத மத்திய–மாநில அரசுகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. தலைமைக்கழகம் அறிவித்திருந்தது.

இதன்படி ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சார்பில் அரண்மனை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர்கள் சுப.தங்கவேலன், சத்தியமூர்த்தி, முன்னாள் எம்.பி. பவானி ராஜேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முதுகுளத்தூர் முருகவேல், பரமக்குடி திசைவீரன், தலைமை செயற்குழு உறுப்பினர் அகமதுதம்பி, நகர்செயலாளர் கார்மேகம், முன்னாள் கவுன்சிலர் அய்யனார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு, நகர் இளைஞரணி செயலாளர் துரைச்சாமி உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர், கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணியினர், மகளிரணியினர், தொண்டர்கள், இளைஞர்கள் திரளாக கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி கோ‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்