வாணியம்பாடி அருகே சுங்கச்சாவடியில் கார், ஆட்டோ மீது லாரி மோதியது 3 பேர் படுகாயம்

சுங்கச்சாவடியில் சுங்கவரி கட்ட கார் உள்பட ஏராளமான வாகனங்கள் வரிசையில் நின்று கொண்டிருந்தது.

Update: 2017-01-13 22:30 GMT

வாணியம்பாடி,

அப்போது ஸ்டீல் பொருட்களை ஏற்றி வந்த லாரி திடீரென பிரேக் பிடிக்காததால் அங்கு நின்றிருந்த 2 கார், ஒரு ஷேர் ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ டிரைவர் குமார், கார் டிரைவர்கள் ரவிக்குமார், சந்தோஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்