ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் அரசு பஸ் மீது கல்வீச்சு; போலீஸ் தடியடி
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கிராமமக்கள் நான்குவழிச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு பஸ் மீது கல்வீச்சு நடைபெற்றது.
கொட்டாம்பட்டி,
ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கிராமமக்கள் நான்குவழிச்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு பஸ் மீது கல்வீச்சு நடைபெற்றது. போலீசார் தடியடி நடத்தி 8 பேரை கைது செய்தனர். உசிலம்பட்டியில் கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
சாலை மறியல்
கொட்டாம்பட்டி அருகே உள்ள பள்ளபட்டியில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி மதுரை-திருச்சி நான்குவழிச்சாலையில் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பள்ளபட்டி, சிலம்பக்கோன்பட்டி மற்றும் சிவகங்கை மாவட்டம் கண்டுகபட்டி, முத்தாண்டிபட்டி உள்பட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பீட்டாவுக்கு எதிராகவும் கோஷமிட்டனர்
இதனால் நான்குவழிச்சாலையின் இரு பக்கங்களிலும் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்றன. இதனால் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. தகவலறிந்து வந்த மேலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமசாமி, தாசில்தார் தமிழ்செல்வி, கொட்டாம்பட்டி, மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், ராம்நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள், கணேஷ்குமார் உள்பட போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.
இதேபோன்று கொட்டாம்பட்டி அருகே உள்ள வஞ்சிநகரத்தில் பொங்கல் பண்டிகை அன்று ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும், அதற்கான தடையை உடனே நீக்க வேண்டும் என்று கோரி கிராம மக்கள், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
சோழவந்தானை அடுத்த சித்தாலங்குடி, அய்யங்கோட்டை, சி.புதூர், நகரி உள்பட பல்வேறு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை 9 மணிக்கு திடீரென நகரி நான்குவழிச்சாலையில் ஒன்றுகூடி திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரியும், இதற்காக மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலையின் இருபக்கமும் ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதால், போக்குவரத்து தடைபட்டது. தகவலறிந்து வந்த சமயநல்லூர் போலீஸ் துணை சூப்பிரண்டு வனிதா தலைமையில் இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய், சப்-இன்ஸ்பெக்டர் அய்யர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போது பொதுமக்கள் நாகர்கோவிலிலிருந்து, திருப்பூருக்கு சென்ற அரசு பஸ்சின் மீது கல்வீசி தாக்கினர். அதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமடைந்தது. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து அரசு பஸ் டிரைவர் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருணாச்சலம்(57) கொடுத்த புகாரின் பேரில், சோழவந்தான் போலீசார் அனுமதியின்றி சாலை மறியல் நடத்தியது, அரசு பஸ்சை கல்வீசி தாக்கியது தொடர்பாக அய்யங்கோட்டை மற்றும் சித்தாலங்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த வக்கீல் சிவராமன், குமாரராஜன், முருகன், கல்லூரி மாணவர்கள் கோபாலகிருஷ்ணன், குழந்தைஆனந்தம், செந்தில்ராஜன், கலைராஜன், நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
உள்ளிருப்பு போராட்டம்
உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லுாரி வளாகத்திற்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதில் ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு. இந்த விளையாட்டிற்கு போடப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினர்.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூரில் ஆதி தமிழர்கட்சி சார்பில் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார்.
மாநில நிதி செயலாளர் விடுதலைவீரன், மாவட்ட தலைவர் மகேந்திரன், மாநகர் மாவட்ட தலைவர் சண்முகபாண்டியன், மாவட்ட ஆலோசகர் ஆனந்தமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தெற்கு மாவட்ட செயலாளர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன் நன்றி கூறினார்.