மாநில அளவிலான ஆக்கி போட்டி அரியலூர் விளையாட்டு விடுதி அணி சாம்பியன்
வாடிப்பட்டி அருகே மாநில அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது. இதில் அரியலூர் விளையாட்டு விடுதி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.
வாடிப்பட்டி,
இறுதிப் போட்டி
வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் நிறைவு நாளில் நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் மதுரை விளையாட்டு விடுதி அணியும், அரியலூர் விளையாட்டு விடுதி அணியும் மோதின. இதில் இரண்டு அணிகளும் கோல் போடாததால் டைபிரேக்கர் முறையில், அரியலூர் விளையாட்டு விடுதி அணி 3-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இரண்டாவது அரை இறுதி போட்டியில் அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி அணியும், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியும் விளையாடின. பாண்டியராஜபுரம் அரசு மதுரை சர்க்கரைஆலை மேல்நிலைப்பள்ளி அணி 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. மூன்றாம் மற்றும் நான்காம் இடத்திற்கான போட்டியில் மதுரை விளையாட்டு விடுதி அணி 4-0 என்ற கோல் கணக்கில், திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி அணியை வென்றது.
சாம்பியன் பட்டம்
இறுதிப்போட்டியில் அரியலூர் விளையாட்டு விடுதி அணி, அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி அணியை 2-1 கோல்கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு டாபே நிறுவன துணைத்தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கி சுழற்கோப்பையை வழங்கினார். பொது மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். தலைமைஆசிரியர் லக்குமணன் வரவேற்றார்.
இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பஞ்சவர்ணம், முன்னாள் தலைமை ஆசிரியர் திருமூலன், எவர்கிரேட் ஆக்கி கிளப் நிர்வாகிகள் ராமானுஜம், ராஜூ, சிதம்பரம், கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர் குழுவினர் செய்திருந்தனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.