பாலாற்றில் மூழ்கி ஒருவர் சாவு
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் மூழ்கி 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்தார்.;
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை பாலாற்றில் மூழ்கி 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ஓரிக்கை கிராம நிர்வாக அதிகாரி நவீன்குமார் காஞ்சீபுரம் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.