உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இரும்பு உருளை விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார். கடல் சீற்றம் நாகை அக்கரைப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த வெற்றிமயில் மனைவி மாலதி என்பவருக்கு சொந்தம

Update: 2017-01-12 22:58 GMT

நாகப்பட்டினம்,

கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இரும்பு உருளை விழுந்து உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவியை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வழங்கினார்.

கடல் சீற்றம்

நாகை அக்கரைப்பேட்டை வடக்குத்தெருவை சேர்ந்த வெற்றிமயில் மனைவி மாலதி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கீச்சாங்குப்பத்தை சேர்ந்த ராஜாங்கம் (வயது55), இடும்பன் (38), தங்கராசு (42), மணிவேல் (42), நவின்குமார் (23), மணிகண்டன் (21), ஜெகருல், விஜய் (26), செல்வராஜ் (45) உள்பட 10 பேர் கடந்த டிசம்பர் மாதம் 8–ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்தநிலையில் வார்தா புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டதால் 12–ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கரை திரும்புவதற்காக ராஜாங்கம், இடும்பன், தங்கராசு ஆகிய 3 பேரும் கடலில் வீசிய வலையை படகில் ஏற்றுவதற்காக, படகில் உள்ள இரும்பு உருளையை இயக்கியுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு அறுத்துக்கொண்டு இரும்பு உருளை கழற்றிக்கொண்டு இவர்கள் 3 பேர் மீதும் விழுந்துள்ளது.

ரூ.4 லட்சம்

இதில் படுகாயமடைந்த ராஜாங்கம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இடும்பனுக்கும், தங்கராசுவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இந்தநிலையில் படகில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்த ராஜாங்கம் குடும்பத்துக்கு தமிழக அரசின் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு மீனவர் ராஜாங்கத்தின் மனைவி செல்விக்கு ரூ.4 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


மேலும் செய்திகள்