சீர்காழி, குத்தாலத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

சீர்காழி, குத்தாலத்தில் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டனர்.

Update: 2017-01-12 22:52 GMT

சீர்காழி,

சீர்காழி

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி வளாகத்தில் அரசு சார்பில் பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க. ஒன்றிய கழக செயலாளர் ராஜமாணிக்கம், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி, மாவட்ட பொருளாளர் செல்லையன், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் தேவதாஸ், பால் கூட்டுறவு சங்க தலைவர் அஞ்சம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வைத்தீஸ்வரன்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ரவிச்சந்திரன் வரவேற்றார். விழாவில் பாரதி எம்.எல்.ஏ., பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பேசினார். கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பூராசாமி, கட்சி நிர்வாகிகள் சுகுமாறன், பார்த்தசாரதி, தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். முடிவில் தனிதாசில்தார் ராணி நன்றி கூறினார்.

இதேபோல் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வங்கி செயலாளர் ராஜேந்திரன் தலைமையிலும், திருவாலி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வங்கி தலைவர் திருமாறன் தலைமையிலும் நடைபெற்ற பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழாவில் பாரதி எம்.எல்.ஏ கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பேசினார். இதில் செம்மங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் ராஜமாணிக்கம், முன்னாள் ஊராட்சி மன்றதலைவர்கள் இளங்கோவன், மகேந்திரன், ஊராட்சி செயலாளர்கள் மனோகரன், பரசுராமன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குத்தாலம்

குத்தாலம் கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கூட்டுறவு தனி அலுவலர் கணேசன் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய கவுன்சிலருமான ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவரும், நகர செயலாளருமான எம்.சி.பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் பண்ணை நடராஜன் வரவேற்றார். இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 4 ஆயிரத்து 628 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கினார். இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவரும், அ.தி.மு.க. தெற்கு ஒன்றியசெயலாளர் தமிழரசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரத்தினம், முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பிள்ளை என்கிற கருணாகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்குனர் மணிவாசகம் நன்றி கூறினார்.

மன்னம்பந்தல்

மன்னம்பந்தல் அருகே ஆக்கூரில் உள்ள கூட்டுறவு அங்காடியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் குத்புதீன் தலைமை தாங்கினார். துணை தலைவர் நடராஜன், முன்னாள் அ.தி.மு.க. ஊராட்சிமன்ற தலைவர் சுதாகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க இயக்குனர் ராமலிங்கம் வரவேற்றார். இதில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் கிருஷ்ணகுமார், தலைவர் குத்புதீன் ஆகியோர் 620 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி பேசினார். இதில் அ.தி.மு.க. ஊராட்சி செயலாளர் பக்கிரிசாமி, மேலமைப்பு பிரதிநிதி சீனிவாசன், மணல்மேடு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் துரைராஜன், தொடக்க கூட்டுறவு வங்கி இயக்குனர் செந்தில்வேலன், ராமலிங்கம், ஜீவா, ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குனர் பாண்டித்துரை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்