லோக் அயுக்தா நீதிபதியாக நியமிக்க பரிந்துரை: நீதிபதி விஸ்வநாத்ஷெட்டி மீது குற்றச்சாட்டுகள் இல்லை சித்தராமையா பேட்டி
லோக் அயுக்தா நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட உள்ள விஸ்வநாத்ஷெட்டி மீது குற்றச்சாட்டுகள் இல்லை என்று சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
முதல்–மந்திரி சித்தராமையா நேற்று கதக்கில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–
நீதிபதி விஸ்வநாத்ஷெட்டிலோக் அயுக்தா நீதிபதி பணிக்கு ஓய்வுபெற்ற நீதிபதி விஸ்வநாத்ஷெட்டியை நியமிக்குமாறு கவர்னருக்கு பரிந்துரை செய்ய முடிவு செய்துள்ளோம். அவர் மீது சட்டவிரோதமாக நீதித்துறை லே–அவுட்டில் வீட்டுமனை பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 90 சதவீத நீதிபதிகள் இவ்வாறு வீட்டுமனை பெற்றுள்ளனர். விஸ்வநாத்ஷெட்டி மீது குறிப்பிட்டு சொல்லும்படியாக குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை.
கப்பதகுட்டா வனப்பகுதி தொடர்பாக என்னிடம் மடாதிபதி ஒருவர் மனு கொடுத்துள்ளார். அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்று அறிவிப்பதற்கு காலஅவகாசம் தேவைப்படுகிறது. கலசா–பண்டூரி குடிநீர் திட்டத்திற்காக போராடியவர்களில் சில ரவுடிகள் இருந்தனர். அவர்களை பிடித்து மாநிலத்தை விட்டு வெளியேற்றியுள்ளோம்.
மார்ச் மாதம் பட்ஜெட்விவசாயிகள் யாரையும் வெளியேற்றவில்லை. இது தொடர்பாக வெளியான தகவல் தவறானது. ஹாரங்கி அணையில் சில பணிகளை மேற்கொள்ள சட்டப்படியே பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக இந்த பணியை வழங்கவில்லை. கர்நாடக பட்ஜெட் வருகிற மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
பேட்டியின்போது கதக் மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.கே.பட்டீல் உடன் இருந்தார்.