4 வழக்குகளில் சாட்சி சொல்ல வராத கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு தஞ்சை கோர்ட்டு உத்தரவு
4 வழக்குகளில் சாட்சி சொல்ல வராத கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர்,
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுதிருவாரூர் நகர துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்தவர் மதுரைசாமி. இவர் தற்போது சென்னை போலீஸ் பயிற்சி கல்லூரியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். இவர் திருவாரூரில் பணியாற்றிய போது திருவாரூர் மற்றும் கொரடாச்சேரி போலீஸ் நிலையங்களில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் 4 வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த 4 வழக்குகள் விசாரணை தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த 4 வழக்குகளில் சாட்சி சொல்ல ஆஜராகுமாறு மதுரைசாமிக்கு தஞ்சை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் சாட்சி சொல்ல ஆஜராகவில்லை.
பிடிவாரண்டுஇந்த நிலையில் இந்த 4 வழக்குகளும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதும் மதுரைசாமி ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை நீதிபதி கார்த்திகேயன் விசாரித்து சாட்சி சொல்ல வராத கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதுரைசாமிக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.