ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரி 2-வது நாளாக போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி திருச்சி கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பல்வேறு அமைப்புகள் சார்பில் 2-வது நாளாக போராட்டம் நடந்தது.
திருச்சி,
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர்.
நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ஜல்லிக்கட்டு காளையுடன் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இரண்டாவது நாளாக...
இந்நிலையில் நேற்று இரண்டாவது நாளாக திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக வீர விளையாட்டு பேரவை, ஜல்லிக்கட்டு பேரவை, ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கையில் பதாகைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி திரண்டனர். பீட்டாவை தடை செய், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கு, ஏறு தழுவுதல் எங்கள் உரிமை, மத்திய அரசே ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கு, நடத்துவோம், நடத்துவோம் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவோம், மத்திய அரசே எங்கள் உரிமையில் தலையிடாதே என அவர்கள் கோஷம் போட்டனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் பலர் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். பெண்களும் இதில் ஆர்வமாக பங்கேற்றனர். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டியதன் அவசியத்தை விளக்கி ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் ஒண்டிராஜ், ராஜேஷ், மகேந்திரன், மூக்கன் ஆகியோர் பேசினார்கள்.