சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு: பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடியில் நலத்திட்ட உதவிகள்
நூத்தப்பூர் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு ரூ.1¼ கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்.
வேப்பந்தட்டை,
மனுநீதி நாள் முகாம்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகாவிற்கு உட்பட்ட நூத்தப்பூர் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நிறைவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார்.
இதில், ஆதிதிராவிடர் நலத்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளின் அலுவலர்களும் தங்கள் துறைசார்ந்த திட்டங்கள் குறித்தும், இத்திட்டங்கள் மூலமாக பொதுமக்கள் பயன்பெறு வதற்கு உண்டான வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து கலெக்டர் நந்தகுமார் பேசியதாவது:-
நிலவரி தள்ளுபடி
அரசால் செயல்படுத்தப் படும் திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் இந்த மனுநீதி நாள் முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி கடந்த மாதம் முழுவதும் நூத்தப்பூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் அரசு அலுவலர்கள் முகாமிட்டு, தங்களது துறை சார்ந்த மக்கள் நலத்திட்டங்களுக்குரிய பயனாளிகளை இனம் கண்டறிந்து, 237 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 26 லட்சத்து 39 ஆயிரத்து 905 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி உள்ளனர்.
தற்போது நிலவி வரும் வறட்சியின் காரணமாக மாநில அரசானது தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மற்றும் வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள்் அனைத்தையும் மத்திய கால கடனாக மாற்றி அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வறட்சியின் காரணமாக வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ள விவசாய தொழி லாளர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 100 நாட்கள் பணி வரம்பு 150 நாட்களாக உயர்த்தப் பட்டுள்ளது.
395 மனுக்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் அரசு அறிவிக்கவுள்ள நிவாரண உதவிகள் மற்றும் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை உள்ளிட்டவற்றை பெற்றுத்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இங்கு நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில், 395 மனுக்கள் பெறப்பட்டு 128 மனுக்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவற்றில் 110 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 157 மனுக்கள் மீது உரிய விசாரணை நடைபெற்று வருகிறது. இம்மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு தகுந்த பதில் அலுவலர்கள் மூலமாக 30 நாட்களுக்குள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நலத்திட்ட உதவிகள்
இந்நிகழ்ச்சியில், 237 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 26 லட்சத்து 39 ஆயிரத்து 905 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் நந்தகுமார் வழங்கினார்.
இதில், வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) துரை, தனித்துணை கலெக்டர் புஷ்பவதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகன், வருவாய் வட்டாட்சியர் மனோன்மணி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் குமாரசாமி, ஊராட்சி எழுத்தர் ஜெயராமன், கிராம நிர்வாக அதிகாரி செந்தில் துரை மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.