சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
மத்திய அரசின் அறிவுறுத்தலின் படி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
திருச்சி,
அதன் அடிப்படையில் திருச்சி கே.கே.நகரில் உள்ள செல்போன் டவர் ஊழியர்கள் நேற்று காலை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை நடத்தினர். அன்பழகன் தெருவில் இருந்து புறப்பட்ட ஊர்வலத்தில் செல்போன் டவர் ஊழியர்கள், பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கலந்து கொண்டு கே.கே.நகரில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். முன்னதாக நடந்த சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டத்தில் செல்போன் டவர் மேலாளரும், ஓய்வு பெற்ற போலீஸ் துணை சூப்பிரண்டுமான ராமச்சந்திரன், பாதுகாப்பு மேலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா, அலுவலக பொறுப்பாளர் சுரேஷ், டேனியல் வில்சன், திருச்சி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரராஜ் ஆகியோர் பேசினர்.