ஈரோட்டில் மாரியம்மன் கோவில்களில் கம்பம் பிடுங்கும் விழா
ஈரோட்டில் மாரியம்மன் கோவில்களில் கம்பம் பிடுங்கும் விழா நடந்தது. இதில் பக்தர்கள் மஞ்சள்நீர் ஊற்றி வழிபட்டனர்.
ஈரோடு,
பொங்கல் விழா
ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா கடந்த 3-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
அதைத்தொடர்ந்து கோவில் முன்பு கம்பம் நடப்பட்டது. இந்த கம்பத்துக்கு தினமும் பெண்கள் புனித நீர் ஊற்றி வழிபட்டு வந்தனர். இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்து வந்தது. கடந்த 10-ந் தேதி பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வந்தனர்.
கம்பம் பிடுங்கப்பட்டது
நேற்று முன்தினம் காலை பெண்கள் மாவிளக்கு எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். நேற்று காலை கம்பம் பிடுங்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கம்பம் பிடுங்கப்பட்டது. பிடுங்கப்பட்ட கம்பத்தை பக்தர்கள் தோளில் வைத்து ஆடிப்பாடியபடி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அப்போது கம்பத்துக்கு மஞ்சள்நீர் ஊற்றி பக்தர்கள் வழிபட்டனர். பின்னர் வீரப்பன்சத்திரம் தெப்பகுளத்தில் கம்பம் விடப்பட்டது.
இதேபோல் பெரியவலசு, சுக்கிர கவுண்டன் வலசு, காவிரி ரோடு ஆகிய மாரியம்மன் கோவில்களிலும் நேற்று கம்பம் பிடுங்கப்பட்டு வீரப்பன்சத்திரம் தெப்பகுளத்தில் விடப்பட்டது. மேலும் பெரியவலசு மாரியம்மன் கோவிலில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து தெப்பகுளத்தில் விட்டனர்.