ஈரோட்டில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறையினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்ட இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில் ஈரோடு ஜவான் பவன் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-01-12 22:45 GMT
ஈரோடு,

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத்தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் செய்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது வழக்கு போட்டதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர் அம்ஜத்கான், நிர்வாகிகள் ஒயிட்சாதிக், சேன்மன்சூர், பசீர், மஜீத், ஜபார் சாதிக் உள்பட பலர் கலந்துகொண்டார்கள்.

மேலும் செய்திகள்