கடலூர் அருகே நாம்தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு 28 பேர் கைது;
கடலூர் அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய நாம்தமிழர் கட்சியின் நிர்வாகிகள் உள்பட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர்,
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் நாம்தமிழர் கட்சியின் சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
வயலில் ஜல்லிக்கட்டு
கடலூரை அடுத்த திருவந்திபுரத்தில் இருந்து திருமாணிக்குழி செல்லும் பாதையில் தனியாருக்கு சொந்தமான வயல் வெளியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மேடுபள்ளம் சரிசெய்யப்பட்டு சவுக்கு கட்டைகளால் வாடிவாசல் மற்றும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. வேலியின் மீது குறிப்பிட்ட இடைவெளியில் நாம்தமிழர் கட்சியின் கொடி கட்டப்பட்டிருந்தது.
பின்னர் நேற்று காலை 7 மணியளவில் லாரி ஒன்று அங்கு வந்தது. அதில் 4 காளை மாடுகளும், உடன் 24 இளைஞர்களும் வந்தனர். பின்னர் அந்த காளை மாடுகள் ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. தடுப்பு வேலியை சுற்றிலும் நாம்தமிழர் கட்சியினரும், கிராம மக்களும் நின்று கொண்டிருந்தனர்.
சீறிப்பாய்ந்த காளை
காலை 8.15 மணியளவில் வாடிவாசல் வழியாக காளை மாடு தடுப்பு வேலிக்குள் சீறிப் பாய்ந்தது. அதை நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஒவ்வொருவராக சென்று அடக்க முயன்றனர். ஆனால் அவர்களிடம் பிடிகொடுக்காமல் காளை திமிறியபடி அங்கும் இங்குமாக ஓடியது. இதைப்பார்த்து வேலியை சுற்றி நின்ற பொதுமக்கள் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்த நிலையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவது பற்றி தகவல் அறிந்ததும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
4 பேர் கைது
ஆனால் அதற்குள் ஜல்லிக்கட்டு போட்டி முடிவடைந்து 4 காளைமாடுகளும், அதனுடன் வந்தவர்களும் லாரியில் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்று விட்டனர். நாம்தமிழர் கட்சி நிர்வாகிகள் மட்டும் அங்கு நின்றிருந்தனர்.
அப்போது தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதாக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புதென்னரசு மற்றும் கடலூர் மாவட்ட, நகர நிர்வாகிகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த தாஸ் என்பவருக்கு சொந்தமான 4 காளைகளும், அதற்கு பாதுகாப்பாக அதே பகுதியை சேர்ந்த 24 இளைஞர்களும் லாரியில் அழைத்து வந்ததாகவும், போட்டி முடிந்ததையடுத்து அவர்கள் திருவந்தி புரம்-பண்ருட்டி சாலை வழியாக ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
4 காளைகளுடன் லாரி பறிமுதல்
இதையடுத்து பண்ருட்டி அருகே உள்ள பாலூரில் சென்று கொண்டிருந்த லாரியை போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் இருந்த காளை மாடுகளின் உரிமையாளர் தாஸ்(வயது 27), அவருடன் வந்த ஆரோக்கியராஜா, சிரில், பாபு ஜேசுராஜ், சுரேஷ்குமார், பொன்னார், ஷாருக் கான், விக்னேஷ், ஜெயகுமார் உள்ளிட்ட 24 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 4 காளைகளும், அவற்றை கொண்டு வந்த லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. எந்த வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தப்பட்ட சம்பவமும், அது தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்ட சம்பவமும் கடலூர் பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது.
தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தியதாக கைதான 28 பேரும் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் 28 பேரும் இரவில் விடுவிக்கப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 4 காளை மாடுகளும் கடலூர் அருகே கீழ்அழிஞ்சிபட்டில் உள்ள பட்டியில் அடைக்கப்பட்டன.