சாத்தூர் ஓட்டலில் தொழில் அதிபர் கொலை
தென்னமநல்லூரை சேர்ந்த தொழில் அதிபரும் வாரப்பத்திரிகையின் பகுதிநேர நிருபருமான கார்த்திகை செல்வன்(வயது43) கடந்த 9–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.
சாத்தூர்,
சாத்தூரில் ஓட்டலில் அமர்ந்திருந்த தென்னமநல்லூரை சேர்ந்த தொழில் அதிபரும் வாரப்பத்திரிகையின் பகுதிநேர நிருபருமான கார்த்திகை செல்வன்(வயது43) கடந்த 9–ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மதுரையை சேர்ந்த 4 பேரும் சிவகாசியை சேர்ந்த 2 பேரும் மதுரையில் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இந்த நிலையில் மதுரை திருமங்கலத்தை சேர்ந்த முத்துராஜ்(42) என்பவர் மதுரை குற்றவியல் நடுவர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டதன் பேரில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டார்.