வெம்பாக்கத்தில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை
வெம்பாக்கத்தில் குடும்பத் தகராறில் இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செய்யாறு உதவி கலெக்டர் பிரபுசங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.
வெம்பாக்கம்,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
குடும்பத் தகராறுவெம்பாக்கம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 28). இவருக்கும், காஞ்சீபுரம் மாவட்டம் திருப்புக்குழியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகள் தமிழரசிக்கும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு சாருமதி (1½) என்ற மகள் உள்ளார். அமல்ராஜ் சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அமல்ராஜ் தினமும் காலையில் பஸ்சில் பணிக்கு சென்று இரவு வீடு திரும்பி வருவார்.
கடந்த 10–ந் தேதி இரவு கணவன், மனைவிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் அமல்ராஜ் வேலைக்கு புறப்பட்டு சென்றார். காலை 10 மணியளவில் பக்கத்து தெருவில் வசித்து வரும் அமல்ராஜின் தாயார் கிருஷ்ணவேணி மகன் வீட்டிற்கு வந்தார்.
அப்போது கணவன்–மனைவி இடையே நடந்த தகராறு தொடர்பாக கிருஷ்ணவேணிக்கும், தமிழரசிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சிறிது நேரத்தில் கிருஷ்ணவேணி அங்கிருந்து சென்றார்.
தூக்குப் போட்டு தற்கொலைஇந்த நிலையில் 11 மணியளவில் குழந்தை சாருமதி வெகுநேரமாக அழுது கொண்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் தமிழரசியின் வீட்டிற்கு வந்து பார்த்தனர். அங்கு தமிழரசி மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து தமிழரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உதவி கலெக்டர் விசாரணைதமிழரசியின் தந்தை காளிமுத்து பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். அதில் ‘எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. எனது மகளிடம் அமல்ராஜ் குடும்பத்தினர் பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் அவள் தற்கொலை செய்து கொண்டாள். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என கூறியிருந்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழரசிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் இது தொடர்பாக செய்யாறு உதவி கலெக்டர் பிரபு சங்கர் விசாரணை நடத்தி வருகிறார்.