பெரம்பலூரில் உள்ள தொடக்க கல்வி அலுவலக பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம்

பெரம்பலூரில் உள்ள தொடக்க கல்வி அலுவலக பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தகராறு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் அருகே உள்ள மங்களம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியரா

Update: 2016-12-31 22:10 GMT

பெரம்பலூரில் உள்ள தொடக்க கல்வி அலுவலக பணியாளர்களிடம் தகராறில் ஈடுபட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

தகராறு

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழமாத்தூர் அருகே உள்ள மங்களம் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றியவர் தயாநிதி. இவர் மீது சுமத்தப்பட்ட ஒரு புகார் குறித்து பெரம்பலூர் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி எலிசபெத் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரம்பலூர் கடைவீதி பகுதியிலுள்ள மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்துக்கு தயாநிதி குடிபோதையில் வந்தார். அவர் வந்த சமயத்தில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எலிசபெத் ஓவிய பயிற்சி முகாம் நிறைவு விழாவில் பங்கேற்றிருந்தார். அப்போது தயாநிதி ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பணியிடை நீக்கம்

இதுதொடர்பாக கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், குடிபோதையில் தொடக்க கல்வி அலுவலகத்துக்கு வந்த ஆசிரியர் தயாநிதி திடீரென தகராறில் ஈடுபட்டு அலுவலக பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பாக பெரம்பலூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தொடக்க கல்வி அலுவலக பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்து ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டதற்காக ஆசிரியர் தயாநிதியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்