மந்திரி சடபாவு கோட்டிற்கு கூடுதல் இலாகா ஒதுக்கீடு முதல்-மந்திரி பட்னாவிஸ் அறிவிப்பு

பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் சுவாபிமானி கட்சியை சேர்ந்தவர் சடபாவு கோட். இவர் விவசாய மந்திரியாக பதவி வகித்துவந்தார். இந்த நிலையில் கூடுதல் பொறுப்பாக அவருக்கு குடிநீர் மற்றும் கழிவுநீர் துறையும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் உறையாற்றிய

Update: 2016-12-31 21:50 GMT
மும்பை,

பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிப்பவர் சுவாபிமானி கட்சி தலைவர் சடபாவு கோட். இவர் விவசாய மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கூடுதல் பொறுப்பாக குடிநீர் மற்றும் கழிவுநீர் இலாகாவும் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இதனை தெரிவித்தார்.

மேலும், மந்திரி சடபாவு கோட்டின் துறை சார்ந்த பணிகள் மிகவும் பாராட்டும் வகையில் இருப்பதாவும், எனவே அவருக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்