பெண் கழுத்தை அறுத்து கொலை பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தார்
பால்கர் மாவட்டம் வசாய் காந்தி சால் பகுதியில் உள்ள ஒரு பூட்டிக்கிடந்த குடிசை வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த துலிஞ் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர்
வசாய்,
பால்கர் மாவட்டம் வசாய் காந்தி சால் பகுதியில் உள்ள ஒரு பூட்டிக்கிடந்த குடிசை வீட்டில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இது குறித்து தகவல் அறிந்த துலிஞ் போலீசார் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், பிணமாக மீட்கப்பட்ட பெண் வசாய் காவ்தேவி குடிசை பகுதியை சேர்ந்த சரோஜ் ஜெய்ஸ்வால்(வயது28) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரது கணவர் பிரேந்திரகுமார்(வயது32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது சரோஜ் ஜெய்ஸ்வால் கடந்த வியாழக்கிழமை அன்றே காணாமல் போயிருந்ததும், அதுபற்றி பிரேந்திரகுமார் போலீசில் புகார் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேகத்தின்பேரில் பிரேந்திரகுமார் உள்பட 3 பேரை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். சரோஜ் ஜெய்ஸ்வால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.