சிகிச்சையின் போது இளம்பெண்ணை சில்மி‌ஷம் செய்த டாக்டருக்கு 1 ஆண்டு ஜெயில் தானே கோர்ட்டு தீர்ப்பு

சிகிச்சையின் போது இளம்பெண்ணை சில்மி‌ஷம் செய்த டாக்டருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம் தானே நவ்பாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த 2013–ம் ஆ

Update: 2016-12-31 21:44 GMT

தானே,

சிகிச்சையின் போது இளம்பெண்ணை சில்மி‌ஷம் செய்த டாக்டருக்கு 1 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தானே கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இளம்பெண்ணிடம் சில்மி‌ஷம்

தானே நவ்பாடாவை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த 2013–ம் ஆண்டு மார்ச் மாதம் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அப்போது சிகிச்சை அளிக்கும் சாக்கில் டாக்டர் ஜெயந்த் ஜாதவ் என்பவர் இளம்பெண்ணிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் டாக்டர் ஜெயந்த் ஜாதவ் மீது நவ்பாடா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

டாக்டருக்கு ஜெயில்

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து டாக்டர் ஜெயந்த் ஜாதவை கைது செய்து, சிறையில் அடைத்தனர். மேலும் அவர் மீது தானே செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்தநிலையில், ஜெய்ந்த் ஜாதவ் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்து அண்மையில் தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது டாக்டர் ஜெய்ந்த் ஜாதவுக்கு நீதிபதி 1 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்