குடகில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்காவிட்டால் பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் ஜனதா தளம்(எஸ்) கட்சி எச்சரிக்கை
குடகில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்காவிட்டால் பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. காட்டு யானை மிதித்து கொன்றது குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே ம
குடகு,
குடகில் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்காவிட்டால் பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று ஜனதா தளம்(எஸ்) கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
காட்டு யானை மிதித்து கொன்றதுகுடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா சித்தாப்புரா அருகே மால்தாரே கிராமத்தை சேர்ந்தவர் செலுவா(வயது 36). காபி தோட்ட தொழிலாளி. கடந்த மாதம்(டிசம்பர்) 29–ந் தேதி காபி தோட்டத்திற்கு வேலைக்கு சென்று கொண்டு இருந்த போது காட்டு யானை ஒன்று அவரை மிதித்து கொன்றது.
இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வனத்துறையினர் காட்டு யானை தாக்கி பலியான செலுவாவின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். மேலும் ரூ.3 லட்சத்தை விரைவில் வழங்குவதாகவும் உறுதி அளித்தனர். அதேபோல, செலுவா வேலை பார்த்த காபி தோட்டத்தின் உரிமையாளரும், அவருடைய குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கினார்.
ரூ.10 ஆயிரம் நிவாரணம்இந்த நிலையில் காட்டு யானை தாக்கி பலியான செலுவாவின் வீட்டிற்கு நேற்று மாவட்ட ஜனதாதளம்(எஸ்) கட்சியின் தலைவர் சங்கீத் பூவய்யா சென்றார். அங்கு சென்ற அவர் செலுவாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். மேலும் சங்கீத் பூவய்யா, ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சார்பில் ரூ.10 ஆயிரத்தை நிவாரணமாக கொடுத்தார். இதையடுத்து சங்கீத் பூவய்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
குடகு மாவட்டத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 25 பேர் காட்டு யானைகள் தாக்கி இறந்து உள்ளனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வனத்துறை மந்திரி ரமாநாத் ராயும், முதல்–மந்திரி சித்தராமையாவும் வரவில்லை. வனத்துறையினர் காட்டு யானைகளை பிடிக்கிறோம் என்ற பெயரில் காசை வீணாக்கி வருகின்றனர். குடகு மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் இருந்து கிராமத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டவோ அல்லது யானைகளை பிடிக்கவோ வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போராட்டம் நடத்தப்படும்ஒருவேளை அவர்கள் காட்டு யானைகளின் அட்டகாசத்தை தடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜனதாதளம்(எஸ்) கட்சியின் சார்பில் பெங்களூரு விதானசவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.